“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும்…” – நயன்தாரா மறைமுக சாடல்

225 0

தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்.

“யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்” என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025-ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் விழாவில் ஆற்றிய உரையில், “என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு.அது தன்னம்பிக்கையும் சுயமரியாதையும். இந்த இரண்டு விஷயங்கள் இருந்தால்போதும் எவ்வளவு நடந்தாலும் யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும், இந்த இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது. இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் போதும். அதற்கு மேல் வேறு எதுவும் பெரிது கிடையாது.இந்த தன்னம்பிக்கை நமக்கு வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்.அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை வரும். இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்” என்றார். நிகழ்ச்சியில் நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார்.

Related Post

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - February 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

கருணாநிதி கைது விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்!

Posted by - November 23, 2023 0
திருவனந்தபுரம்: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (வயது 96) முதுமை காரணமாக கேரளாவில் இன்று காலமானார். நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர்…

நவீன கால நாட்டாமைகள்…! நடவடிக்கை எடுக்குமா அரசு…?

Posted by - April 13, 2023 0
“இந்த குடும்பத்தோட யாரும் அன்னந்தண்ணி பொழங்ககூடாது” என நாட்டாமை படத்தில்  நடிகர் விஜயகுமார் பேசும் சினிமா நாம் அனைவரும் அறிந்ததே.இந்த காலத்திலும் இப்படி ஊரை விட்டு ஒதுக்கி…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *