லூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. இந்த நிலையில், தி.மு.க-வின் அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செயலாளரான ஏரிபுதூர் வெங்கடேசன், எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து, மண் அள்ளி விற்பனைச் செய்கிறார். இதுபற்றி கேட்டதற்கு எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார்; கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு வெங்கடேசன்தான் முழுக்க முழுக்கக் காரணம்’’ எனக் கூறியிருந்தனர்.இதுபற்றி தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘அந்தக் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகாலமாக பயன்படுத்திவந்த அந்த நிலம், என்னுடைய பூர்வீக நிலம். என் பெரியப்பாவிற்குச் சொந்தமானது. அவர் சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டவர். 1993-ம் ஆண்டிலேயே அவரது வாரிசுகளான எங்கள் பெயர்களில், அந்த நிலத்தை ‘உயில்’ எழுதி வைத்துவிட்டார். அதேசமயம், எங்கள் வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எதிர்த்தரப்பினர்தான் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த உயில் மாயமாகியிருந்தது. சமீபத்தில் எங்கள் பழைய வீட்டை இடித்தபோது தான் அந்த ஆவணம் சிக்கியது. அதேபோல, எதிர்த்தரப்பினரை நான் தாக்கவுமில்லை; கொலை மிரட்டல் விடுக்கவுமில்லை; என் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்வேன்’’ என்றார்.
Related Post
ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…
சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!
சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வேத ஜோதிடத்தில்,…
விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (287)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- “சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

- அம்மா உணவகம் முதல் தாலிக்கு தங்கம் வரை? – முடங்கிய திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தயாராகும் இபிஎஸ்

- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!
