வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! – திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்

207 0

கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயல்வதாக தி.மு.க ஒன்றியச் செயலாளர் மீது ஒரு குடும்பத்தினர் புகார் அளித்திருப்பது, வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. இந்த நிலையில், தி.மு.க-வின் அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செயலாளரான ஏரிபுதூர் வெங்கடேசன், எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து, மண் அள்ளி விற்பனைச் செய்கிறார். இதுபற்றி கேட்டதற்கு எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார்; கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு வெங்கடேசன்தான் முழுக்க முழுக்கக் காரணம்’’ எனக் கூறியிருந்தனர்.இதுபற்றி தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘அந்தக் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகாலமாக பயன்படுத்திவந்த அந்த நிலம், என்னுடைய பூர்வீக நிலம். என் பெரியப்பாவிற்குச் சொந்தமானது. அவர் சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டவர். 1993-ம் ஆண்டிலேயே அவரது வாரிசுகளான எங்கள் பெயர்களில், அந்த நிலத்தை ‘உயில்’ எழுதி வைத்துவிட்டார். அதேசமயம், எங்கள் வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எதிர்த்தரப்பினர்தான் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த உயில் மாயமாகியிருந்தது. சமீபத்தில் எங்கள் பழைய வீட்டை இடித்தபோது தான் அந்த ஆவணம் சிக்கியது. அதேபோல, எதிர்த்தரப்பினரை நான் தாக்கவுமில்லை; கொலை மிரட்டல் விடுக்கவுமில்லை; என் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்வேன்’’ என்றார்.

Related Post

“ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” – அமைச்சர் மூர்த்தி பேச்சால் சர்ச்சை

Posted by - January 2, 2025 0
“பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்து போனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.” மதுரை முக்குலத்தோர் இலவச…

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!

Posted by - December 16, 2024 0
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *