ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

301 0

நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பலரும் கேபிள் டிவி கனெக்ஷனை ‘கட்’ செய்துவிட்டு ஓடிடி தளங்களுக்கு ‘ஜம்ப்’ அடித்துவரும் நிலைப்பாட்டில், தன்னுடைய டிடிஎச் வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் நோக்கத்தின் கீழ் டாடா பிளே நிறுவனமானது டாடா பிளே ரெக்கார்ட் பிரீமியம் (Tata Play Record Premium) என்கிற சேவையை வழங்கி வருகிறது.பெயர் குறிப்பிடுவது போலவே இது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பதிவு செய்ய உதவுகிறது. இந்த சேவையின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே நேரத்தில் பல சேனல்களில் இருந்து கன்டென்ட்-ஐ ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது (Record multiple channels at same time).

அதாவது நீங்கள் வேறொரு சேனலில் எதையாவது பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பின்னர் பார்க்க வேண்டிய மற்றொரு டிவி நிகழ்ச்சியை ரெக்கார்ட் செய்யலாம். சுருக்கமாக டாடா பிளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்கள் – நேரத்தட்டுப்பாடு, ஒரே நேரத்தில் 2 நிகழ்ச்சிகள் போன்ற காரணங்களால் – எந்தவொரு நிகழ்ச்சியையும் இழக்க வேண்டிய அவசியமே இருக்காது.

என்ன விலை? எவ்வளவு நேரம் ரெக்கார்ட் செய்யலாம்? டாடா ப்ளேவின் ரெக்கார்ட் பிரீமியம் சேவைக்கு மாதம் ரூ.199 செலவாகும். இந்த சேவைக்கான சந்தாவை டாடா பிளே இணையதளம் அல்லது டாடா பிளே மொபைல் ஆப் வழியாக டிஜிட்டல் முறையில் வாங்கலாம்.

இந்த சந்தாவின் கீழ் உங்களுக்கு 100 மணிநேர ரெக்கார்டிங் கிடைக்கும். மேலும் (முன்னரே குறிப்பிட்டபடி) ஒரே நேரத்தில் 20 ப்ரோகிராம்களை உங்களால் பதிவு செய்ய முடியும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. உங்கள் அக்கவுண்ட் செயலிழந்தாலும் கூட, நீங்கள் ரெக்கார்ட் செய்த ப்ரோகிராம்களை 30 நாட்களுக்குப் பார்க்க முடியும்.இந்தச் சேவை டாடா பிங்கே பிளஸ் செட்-டாப்-பாக்ஸ் (Tata Play Binge+ STB) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டாடா பிளே நிறுவனத்திடம் டாடா பிளே பேஸிக் ரெக்கார்ட் (Tata Play Basic Record) என்கிற இலவச ரெக்கார்டிங் சந்தாவும் உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் உங்களால் 25 மணிநேரம் வரையிலான கன்டென்ட்-ஐ மட்டுமே பதிவு செய்ய முடியும்.

மேலும் ஒரே நேரத்தில் ஒரே ஒரு புரோகிராம் மட்டுமே ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கப்படும். அதுமட்டுமின்றி டாடா பிளே பேஸிக் ரெக்கார்ட் சந்தாவின் கீழ் நீங்கள் செய்யும் பதிவுகள் ஆனது 3 மாதங்களுக்கு பிறகு (சரியாக பதிவு செய்த தேதியிலிருந்து) நீக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டாடா பிளே பிங்கேவில், ஜப்பானிய அனிமேஷன் பிளாட்ஃபார்ம் ஆன அனிமேக்ஸ் சேர்க்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய நுகர்வோர்கள் மத்தியில் அனிமேஷன் கன்டென்ட்கள் பிரபலமடைந்து வருவதை மனதிற்கொண்டு டாடா பிளே நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் டாடா பிளே பிங்கே சந்தாதாரர்கள் இப்போது அனிமேக்ஸில் இருந்து தங்களுக்கு பிடித்த அனிமேஷன் கன்டென்ட்டை பார்க்க முடியும். அனிமேக்ஸ் என்பது டாடா பிளே பிங்கே சேவையில் பயனர்கள் அணுகக்கூடிய பல தளங்களில் ஒன்றாகும். அனிமேக்ஸ் தவிர, டாடா பிளே பிங்கே சேவையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+), ஜீ5 (ZEE5) உள்ளிட்ட ஓடிடி சேவைகளும் கிடைக்கும்

கூடவே பியூஸ் பிளஸ் (Fuse+), ஹால்மார்க் (Hallmark), எம்எக்ஸ் பிளேயர் (MX Player), பிடிசி பிளே (PTC Play), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), வ்ரூட் (VROTT), ஸ்டேஜ் (STAGE), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ரீல் டிராமா (ReelDrama) உட்பட பல வகையான ஓடிடி தளங்களுக்கான அணுகல்களும் கிடைக்கும்.

Related Post

கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

Posted by - December 20, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள். பல்வேறு…

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

Posted by - March 7, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட…

மோசமான சிபில் ஸ்கோர் இருக்கிறதா? இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

Posted by - March 19, 2024 0
உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதாவது தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதை சரி செய்யும் படி கிரெடிட் பியூரோவை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை…
hq720 1

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ

Posted by - May 6, 2026 0
சன் டிவி சன் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். டாப் 5 TRP ரேட்டிங்கில் மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல், மருமகள்…

G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!

Posted by - December 9, 2022 0
இயற்கையாகவே இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு எளிமையான, நேர்மறையான தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தேவையில்லாத எந்த விஷயத்திலும் தலையிட மாட்டார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *