கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்

191 0

அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகராட்சி துறையில் முறைகேடு- அமலாக்கத்துறை புகார்

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனம் செய்வதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றதாக ஏற்கனவே தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. தற்போது டெண்டர் எடுப்பதிலும் 1,020 ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. எனவே அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.  இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே என் நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

கழிப்பறை  முதல், நபார்ட் வங்கி வரை ஊழல்

கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, 20%- 25% வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இதெல்லாம் “Tip of the Iceberg” தான் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை இதனை முழுமையாக விசாரிக்குமாறு தெரிவித்துள்ளது. வரலாறு நெடுக விஞ்ஞான ஊழல்களுக்கே பெயர்போன கட்சியான திமுக நடத்தும் ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பதே, வெறும் “கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மாடல்” தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஏற்கனவே ED அனுப்பிய ரூ. 888 கோடி #CashForJobs முறைகேட்டை இன்று வரை விசாரிக்காமல், ஊழல் அமைச்சரைக் காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! தற்போது, அடுத்த ஊழலும் வெளிவந்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே,-மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்திருக்கலாம். பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ. 5000/- தாரளாமாக வழங்கலாம்.

திமுக கரைவேட்டிகள் கம்மி எண்ணப்போவது உறுதி

அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிற்கு ஒரு ஆண்டிற்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்துவிடலாம். இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் தானும், தன் சகாக்களும் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின், காலம் மாறுகிறது. காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன. அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி. உண்மையிலேயே  ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமின்றி இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். செய்வாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…
tvk aiadmk

TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?

Posted by - May 28, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அதிமுக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் இணைவது தவெக கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒவ்வொரு…
tvk

CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க

Posted by - June 1, 2026 0
CM Vijay Speech: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தான் அணியும் கோட் சூட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *