குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

195 0

நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது :

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்த புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்திருக்கிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை.இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்களது தரப்பில் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதற்கு செவிசாய்த்து, அந்த குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Related Post

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் – ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து pixeltamil.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள். Tamil Nadu Budget 2025 LIVE Updates: ரமேஸ்வரத்தில் புதிய…
%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 %E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?

Posted by - May 20, 2026 0
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. யூடியூப்பர்…

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்

Posted by - September 21, 2023 0
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

Posted by - April 20, 2023 0
guru peyarchi 2023 date : சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *