சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

272 0

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால், மீனக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல துறைகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான்  சிங்கப்பூர் சலூன்.

இதுவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

களம்

தனது ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சா-வை பார்த்து முடி திருத்தம் செய்யும் வேலையின் மீது  ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆசை ஏற்படுகிறது. அவரிடம் முடி திருத்தம் செய்யும் வேலையை கற்றுக் கொள்கிறார்.

படித்த முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என தன்னுடைய சொந்த சலூனை துவங்க வேண்டும் என ஆசைப்படும் ஆர். ஜே. பாலாஜி, கஷ்டப்பட்டு தனது சொந்த சலூனையும் ஆரம்பிக்கிறார். நினைத்தபடி சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சலூனை துவங்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கு அதன்பின் பல சோதனைகள் வர தொடங்குகிறது.

இந்த சோதனைகளை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார், இதன்பின் என்ன நடந்தது? இறுதியில் தனது சிங்கப்பூர் சலூனை பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.ஆர். ஜே. பாலாஜி இதுவரை நடித்த படங்களில் இருந்து சற்று மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காட்டியுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். படத்தின் முதல் பாதியில் பட்டையை கிளப்பும் சத்யராஜ், இரண்டாம் பாதியில் அமைதியாகி விடுகிறது.

லால் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை அவர் அழகாக திரையில் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் படத்தின் இறுதி வரை ஆர்.ஜே. பாலாஜிக்கு துணை நின்று நண்பனாக வரும் கிஷன் தாஸ், நம்முடைய வாழ்க்கையில் நமக்காக இருக்கும் நண்பனை நினைவூட்டுகிறார்.

மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் நடிப்பும் ஓகே. லோகேஷ் கனகராஜ், அரவிந்த் சாமி மற்றும் ஜீவாவின் கேமியோ கைதட்டல்களை அள்ளுகிறது.

கோகுல் தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். முதல் பாதி நகைச்சுவையாக செல்ல, இரண்டாம் பாதி முழுக்க எமோஷனலாக பயணிக்கிறது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும், கதை நம்முடைய வாழ்க்கை பிரதிபலன் காரணமாக அந்த தொய்வும் பெரிதாக தெரியவில்லை.

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கிஷன் தாஸின் சிறு வயது பருவத்தில் நடித்த சிறுவர்களும் படத்திற்கு பிளஸ் ஆக அமைகிறது. ‘success is not an option its must’, ‘engineering என்ன நம்முடைய குல தொழிலா’ என ஆர்.ஜே. பாலாஜி பேசும் வசனங்கள் கவனம் பெறுகிறது.

பிளஸ்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பு

சத்யராஜ் நடிப்பு

முதல் பாதி

எமோஷனல் காட்சிகள்

வசனங்கள்

மைனஸ்

சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு

 சிங்கப்பூர் சலூன் முடியை மட்டுமல்ல, வாழ்க்கையையும் திருத்தும்..

 

Related Post

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பத்த வைத்த சுனிதா.. முகம் கருத்து போன ஹவுஸ் மேட்ஸ், இன்றைய எபிசோட்

Posted by - January 7, 2025 0
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரப் போகிறார்கள். இதன் அறிவிப்பு நேற்றே வந்தது. அதன் முதல் கட்டமாக இப்போது சுனிதா…

அட! விஜய்யின் ‘லியோ’ படத்தில் தனுஷா? வேற லெவல் தகவல் !

Posted by - April 10, 2023 0
தளபதி விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில்…

வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ

Posted by - March 28, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று முடிந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *