திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

370 0

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக நகரமன்ற உறுப்பினர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் திமுக நகரமன்ற உறுப்பினராக உள்ளார்.  மேலும், சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளருமாக இருந்தும் வருகிறார். இவர் இப்பள்ளியில் யூகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த கொடூரனின் செயலால் பாதிக்கப்பட்டதை சிறுமி  அவரது பெற்றொரிடம் கூறியுள்ளார்.

தொடர் அலட்சியம்:

இது தொடர்பாக புகார் அளித்தும் பக்கிரிசாமி மீது வழக்கு பதிவு செய்யாமல் மகளிர் போலீசார் அலட்சியம் காட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.  இதன் தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.  ஆனால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் மாஜி திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி.

சிறையில்:

இதனிடையே பக்கிரிசாமியை  காவல் நிலையத்தில் வைத்து  விசாரிக்காமல்  தனியார் சொகுசு மண்டபத்தில்  வைத்து போலீசார் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருத்தாசலத்தில் இருந்து அழைத்து சென்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய  போலீசார்  பின்னர் நீதிபதி  உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Post

“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

Posted by - December 9, 2023 0
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்…

“தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்” – அலெர்ட் செய்த வானிலை மையம் – எங்கெல்லாம் தெரியுமா?

Posted by - April 6, 2024 0
சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ்…

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

Posted by - February 19, 2024 0
Tamil Nadu Budget 2024: மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு…

சீமான் பேச்சு அநாகரீகமானது அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Posted by - February 20, 2023 0
KS Alagiri Press Meet | தமிழர்களின் பெருமையை குறைக்கும் வகையில் சீமான் நடந்துகொள்ளக் கூடாது என சீமானுக்கு அழகிரி அறிவுரை காவல்துறை பாதுகாப்புடன் இருந்துகொண்டு பிற…

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Posted by - July 1, 2023 0
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *