ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

258 0

புதுடெல்லி:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது. இந்நிலையில் ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி வழங்க வேண்டும், ஆலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- வேதாந்தா குழுமத்துக்கு கறார் உத்தரவு  பிறப்பித்த உச்சநீதிமன்றம் | Supreme Court Rejects a plea to carry  maintenance of Sterlite ...

இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கில், அதனை தமிழக அரசே அகற்றும் எனவும், அதற்கான செலவுகளை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மேற்பார்வையில் சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில பல்வேறு வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பணிகள் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு லாரிகள் மூலம் ஆலையில் இருந்து பாதுகாப்புடன் அகற்றப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் 1.65 மில்லியன் மெட்ரிக் டன் ஜிப்சம் கழிவுகள் இருந்தது. இதுவரை அவற்றில் 45 ஆயிரம் மெட்ரிக் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வாரத்திற்கு ஒருமுறை எவ்வளவு ஜிம்சங்கள் ஆலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. இதற்கிடையே ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்களில் விசாரித்து முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது. எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது. எனவே வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Post

சினிமா மோகத்தால் வந்த சிக்கல்: ஆந்திராவில் மிரட்டி பணம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

Posted by - July 11, 2023 0
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் கொல்லி ஸ்ரீனு, ஸ்ரீதர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 2000 ஆயிரம்…

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

Posted by - August 15, 2024 0
Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின்…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

பிரமாண்ட எந்திரத்தால் முடியாததை சாதித்து காட்டிய “எலி வளை” தொழிலாளர்கள்

Posted by - November 29, 2023 0
உத்தர்காசி: நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம். சில அடிகள் முதல் பல அடிகள் வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *