உதயநிதி ஸ்டாலின் மந்திரியாக, முதல்-அமைச்சராக வரவேண்டும் : மருமகள் பதிவால் பரபரப்பு .

221 0

                                                                குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். திண்டுக்கல்: தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறையில் அமைச்சராக பதவி வகித்தார்.

தற்போது கூட்டுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இதனையடுத்து ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதையும் படியுங்கள்: அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் நியமனம் பெரும்பாலான அமைச்சர்கள் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார். அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம். அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார். முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார்.ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான். குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழகத்தின் மந்திரியாக வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Post

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கைது

Posted by - December 3, 2022 0
மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை…

லைவ் அப்டேட்ஸ்: செப்.15ல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை – பட்ஜெட்டில் அறிவிப்பு .

Posted by - March 20, 2023 0
வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *