war news

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

121 0

ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரை அறிவித்த பாகிஸ்தான்:

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தாலிபன்கள் ஆட்சி நடைபெறும் ஆஃப்கானிஸ்தான் மீது நேரடியான போரை இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தான் படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தின. அடுத்த சில மணி நேரத்திலேயே, ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தஹாரில் பாகிஸ்தான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதற்றம் வெடித்தது. இதையடுத்து, ஆஃப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போரை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

 

”பொறுமை முடிவுற்றது”

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்களது பொறுமை அதன் முடிவை எட்டிவிட்டது. தற்போது இது எங்களுக்கு இடையேயான வெளிப்படையான போர்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எல்லையில் தீவிரமடைந்த மோதலுக்கு மத்தியிலும் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆஃப்கானிஸ்தான் சொல்வது என்ன?

காபூலில் குறைந்தபட்சம் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பாதிப்புகள் தொடர்பான தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.’ உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.  தெற்கே உள்ள காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வியாழக்கிழமை இரவு எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் தங்களது ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதாகவும், எதிரி நாட்டின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தரைவழித் தாக்குதலில் தனது எட்டு வீரர்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சிலர் காயமடைந்தாலும், பாகிஸ்தானின் பல ராணுவ மையங்கள் கைப்பற்றப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சொல்வது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஃப்கானிஸ்தானில் டந்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் என்பவை,  அப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதக் குழுவினரை அழிப்பதற்கானது என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வியாழக்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் தாக்குதல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடத்தப்பட்டது என்றும், ராணுவ நிலைகள் ஆஃப்கானிஸ்தானால்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மை இல்லை எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நடந்த மோதலுக்குப்  பின்னர் இருநாடுகளின்  எல்லைகளும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா?

Posted by - March 27, 2023 0
நியூயார்க் : இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?…

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - September 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Posted by - July 31, 2023 0
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர்…

கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு

Posted by - June 24, 2025 0
கத்தார், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதையடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *