10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

217 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள தனுஷ் வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் எல்லாவிதமான கதாப்பாத்திரங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண மக்களுக்கு ஆதரவாக நின்று பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாகவே இருக்கும். தனுஷின் வாத்தி படமும் அப்படிபட்ட கதையை கொண்டது தான்.

கதை சுருக்கம் :

பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியின் வியாபார நுணுக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வுக்காக பயிற்சி மையங்களை தொடங்கி தரமான பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கவேண்டும் என்று மக்கள் போராட்டம் செய்ய கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க அரசு நினைக்கிறது.

இதை தெரிந்துக்கொண்ட சமுத்திரக்கனி (வில்லன்) அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த 2ம், 3ம் தர ஆசிரியர்களை அனுப்பி அவர்களின் கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் (பாலா) இருக்கிறார். தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் தனுஷ் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு.

 

ரசிகர்கள் கருத்து :

படம் பார்த்து ரிவியூ சொன்ன ஒவ்வொருவரும் படத்தை பார்த்த உணர்ச்சிவசத்தில் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர். கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் மிக அருமையாக வந்திருக்கிறது என்றும், 10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் இந்நேரம் படித்து மிகப் பெரிய பதவிகளில் உயர்ந்திருப்போம் என்றும் ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் வந்து பார்க்க வேண்டிய படம் இது. படம் பார்த்த அனைவரும்கிட்டத்தட்ட பாசிட்டிவ் ரிவியூவை கொடுத்துள்ளனர்.

Related Post

ஸ்ருதிஹாசன் முகத்துக்கு என்னாச்சு.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - November 29, 2022 0
ஸ்ருதி நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் அனைத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவரது காதல் விஷயங்களை கூட இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக பகிரக்கூடியவர். அவரது முகத்தில் பிளாட்டிக் சர்ஜரி செய்ததை கூட…

தமிழ் சினிமாவை விழுங்கும் திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம்….

Posted by - August 18, 2025 0
தமிழ் சினிமா, ஒரு காலத்தில் இந்தியாவின் கலை, தொழில்நுட்ப சிறப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய உன்னத துறையாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளங்கள் வழியாக திட்டமிட்டு, ஒருங்கிணைத்து…

மனுஷங்க பார்க்க மாட்டாங்க இந்த படத்தை.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த நட்சத்திரம்

Posted by - December 11, 2023 0
அனிமல் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் இருந்து வெளிவந்த திரைப்படம் அனிமல். Pan இந்தியா தரத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.மேலும் ரன்பீர் கபூர்,…

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *