2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

234 0

சென்னை:

கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டை சூழ்ந்த வெள்ளத்தால் வாங்கி வைத்த பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன. அது போல் சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட மளிகை பொருட்கள் எல்லாம் வீணாகிவிட்டன.

வீட்டில் மின் சாதன பொருட்கள் நீரில் மூழ்கி, காயலான் கடைக்குகூட போட முடியாத சூழல் எழுந்துள்ளது. தற்போது இந்த அளவுக்கு மழை பெய்யும் என மக்கள் யாரும் நினைக்கவில்லை, அதுதான் இத்தனை பாதிப்புக்கு காரணம்.2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில்  பறந்த அந்த ஆர்டர் | Chennai Weather explains about what happened in  Chembarambakkam lake ...

இந்த மழையை 2015 பெருவெள்ளத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். தற்போது வந்த புயலே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வடகிழக்கு பருவமழையே இன்னும் முடியாமல் இருக்கும் போது இனி அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் தற்போது கீழ் தளத்தில் குடியிருக்கக் கூட ஆட்கள் வராமல் வீட்டு உரிமையாளர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மற்ற தளங்களுக்கு எல்லாம் போட்டா போட்டி நிலவுகிறது. அது போல் வீட்டை வாங்கும் போதும் கூட மேல் தளங்களையே மக்கள் விரும்புகிறார்களே தவிர கீழ் தளத்தை அல்ல. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் உள்ளன.

இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் அதீத மழை பெய்தது. ஏற்கெனவே அந்த ஏரியில் நவம்பப் 30ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வந்தது. அப்படி பார்த்தால் 36 முதல் 48 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வரை அதிகரித்துள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என 2015 டிசம்பர் 1 ஆம் வெளியான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு மிகவும் தாமதம். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் 2.12.2015 ஆம் தேதி அதிகாலை தண்ணீரின் அளவு அபாய அளவை தாண்டியது. ஏற்கெனவே அந்த ஏரியில் 2016ஆம் ஆண்டு கோடை காலத்தையொட்டி 85 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெரு மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திறந்துவிடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏரியில் நீர் பாயும் திசையில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழல் குறித்து பலருக்கு தெரியாது. இதனால் ஏரி திறப்பு விவகாரத்தை மக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மேக வெடிப்பு போன்ற மழையால் தண்ணீரின் அளவுக்கு அபாய கட்டத்தை எட்டிவிட்டால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஆண்டை எடுத்துக் கொண்டால் 76 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு இருந்தது. ஆனால் நகரில் பெய்த பெரு மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு 2015 ஐ விட தற்போதுதான் மக்களுக்கு அதிகரித்துள்ளது என சென்னை வெதர் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

முன்னாள் அமைச்சர் காலமானார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

Posted by - April 16, 2024 0
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார். திமுக…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

Posted by - January 19, 2025 0
ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள்…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

“அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மருந்து” – விவகாரத்துக்கு விண்ணப்பித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட முதல் பதிவு

Posted by - April 10, 2024 0
ஐஸ்வர்யா தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் விவகரத்து கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா தனுஷ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *