406 வாழை மரங்களை வெட்டி சாய்த்த மின்வாரிய அதிகாரிகள்… அதிர்ச்சியில் விவசாயிகள்!

319 0

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வாரப்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் கடந்த 50 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்துவருகிறார்.

வரும் ஓணம் பண்டிகைக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வாழை பயிரிட்டுள்ளார். வாழைகள் குலைதள்ளி இன்னும் 20 நாட்களில் விளைந்து வெட்டும் நிலையில் நின்றன. இந்த ஒரு வாழையின் இலை அப்பகுதி வழியாக செல்லும் கேரள மின்சார வாரியத்தின் 220 கிலோவாட் ஹைடென்சன் லைன் மீது பட்டு ஸ்பார்க் ஆகியுள்ளது.KSEB cut 406 banana trees without warning; most trees were ready for  harvest - KERALA - GENERAL | Kerala Kaumudi Online

இதனால் மின் விநியோகம் தடைப்பட்டதாக காரணம் காட்டி அந்த பகுதியில் நின்ற குலைத்தள்ளிய 406 வாழைகளையும் மூலமற்றம் மின்சாரவாரிய அதிகாரிகள் வெட்டி சாய்த்துள்ளனர். இது விவசாயி தாமஸுக்கும், அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.வெட்டி சாய்க்கப்பட்ட வாழை தோட்டத்தில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் விவசாயி தாமஸ்பல்லாயிரம் உயிரினங்களுக்குப் பயனளிக்கும் `பவளப்பாறைகள்’ அழிவின் விழிம்பில் இருக்கும் அபாயம்..!

இதுபற்றி தாமஸ் மற்றும் அவரது மகன் அனீஷ் ஆகியோர் கூறுகையில், “நான் 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். இதுவரை இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை. மின்சார வாரியம் இதுபற்றி எனக்கு நோட்டீஸ் தராமல் இந்த செயலை செய்துள்ளனர். அவர்கள் எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் வாழை இலைகளை வெட்டி உயரத்தை குறைத்திருப்போம்.

தண்ணீர் கிடைக்காததால் 150 மீட்டர் தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து கஷ்டப்பட்டு வாழையை வளர்த்தோம். இன்னும் ஒரு மாதத்தில் வெட்ட வேண்டிய வாழைகளை முழுவதும் வெட்டி சாய்த்துவிட்டனர். இதனால் எங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார். இந்த செயல் விவசாயிகளின் இதயத்தை நொறுக்கி உள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி கூறுகையில், “இடுக்கி டூ கோதமங்கலம் செல்லும் 220 கிலோ வாட்ஸ் மின் லைனின் கீழ் வாரப்பெட்டி பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் வாழைகளை வெட்டி சாய்த்ததாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டேன். புகார் அளித்தவர் நட்டிருந்த வாழைகள் 220 கே.வி லைன் அருகே வரை வளர்ந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மின்சாரத்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டிதமிழ்நாட்டில் மாம்பழ உற்பத்தி குறைந்தது ஏன்..? மத்திய

அமைச்சர் விளக்கம்!

கடந்த 4-ம் தேதி வாழை இலை லைனில் பட்டதால் மின் சப்ளையில் தகராறு ஏற்பட்டுள்ளது. காற்று வீசும்போது சில வாழை இலைகள் லைனில் பட்டு தீ பிடித்துள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அந்த இடத்தில் நேரடியாக சென்ற சமயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஷாக் அடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மின் சப்ளையில் தகராறு ஏற்படாமல் இருக்கவும், மக்கள் மீது ஷாக் அடிக்காமல் இருக்கவும் உடனடியாக வாழைகளை வெட்டியதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இதை பிரத்யேக விஷயமாக கருதி நடவடிக்கை எடுத்திருக்கலாம். அந்த விவசாயிக்கு உதவும்படி நடவடிக்கை எடுக்கும்படி மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.More than 400 banana trees were cut and destroyed! Electricity officials  are rude!

இதுபற்றி விவசாயத்துறை அமைச்சர் பி.பிரசாத் கூறுகையில், “ஒரு விவசாயியின் வியர்வைக்கு விலை கொடுக்காமல் அவரது பயிரை அழிப்பது கொடூரமான செயல். ஹை டென்சன் லைனுக்கு கீழ் விவசாயம் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. மின்சாரம் மூலம் உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்படக்கூடாது என்பது மாற்று கருத்து இல்லை.

அந்த பகுதியில் வாழைவிவசாயம் செய்யக்கூடாது என்றால் மின்சார வாரியம் முன்பே சொல்லியிருக்கலாம். விளைந்து விலை கிடைக்கும் சமயத்தில் விவசாயியின் விளைபொருளை நாசமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தாமஸின் மகன் அனீஷிடம் நான் பேசினேன். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 406 வாழைகளை வெட்டி சாய்த்த வேதனையில் அந்த குடும்பம் உள்ளது. இதுபற்றி மின்சாரத்துறை அமைச்சரிடம் நான் பேசினேன். விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற மோசமான அனுபவங்கள் விவசாயிகளுக்கு ஏற்படாமல் இருக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Related Post

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

Posted by - May 9, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார்…

ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் – காரணம் என்ன?

Posted by - March 11, 2025 0
அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே…
Gemini Generated Image adeqyiadeqyiadeq

ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?

Posted by - March 20, 2026 0
ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின்…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *