அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்.. நீலகிரியில் பரபரப்பு

353 0

நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரம் என்பதால் இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில்  வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நல்ல நேரம் முடிவதற்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே தள்ளு முள்ளு, மோதல்கள் ஏற்பட்டது.

நீலகிரி தொகுதியில் பாஜக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான சிட்டிங் எம்பி ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.இந்நிலையில், நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினரும் ஒன்று திரண்டனர். இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருக்கு 10 மணியும் அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் வந்த பின்பு ஊர்வலம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல் துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தை தாக்க முயன்ற அதிமுகவினரை காவல்துறை கட்டுப்படுத்தியது தொடர்ந்து பாஜகவினரை வேகமாக செல்ல அறிவுறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினரை கண்டித்து எல். முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் பழைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

Related Post

tvk vck

பனையூரை நோக்கி மக்கள் நலக் கூட்டணி? சிக்னல் கொடுத்த காங்., திருமா, கம்யூ.,? விஜயின் அமைச்சரவை ரெடி?

Posted by - May 5, 2026 0
TVK Vijay TN Election 2026: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. TVK…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…
Generated Image February 26 2026 12 55PM

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் – என்ன சொன்னார் இபிஎஸ்.?

Posted by - July 18, 2025 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆட்சி அதிகாரம் குறித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்து சூசக பதிலை கூறியுள்ளார். அவர் என்ன…
tvk vijay e1777957622993

TN Election Result 2026: சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்? வாக்கு வித்தியாசம்? மிகப்பெரிய, சிறிய வெற்றியாளர்கள்

Posted by - May 5, 2026 0
TN Election Result 2026 Chennai MLAs: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *