இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

303 0

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சமவேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திமுக தேர்தல் அறிக்கையில் 311 வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய குழு அமைக்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நம்பி ஆசிரியர்கள் களைந்து சென்றனர்.

அரசு அமைத்த குழுவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னரும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக்கூறி கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது.பொய்யான வாக்குறுதிகளின் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதற்கு பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து மற்றும் மின்வாரிய ஊழியர்கள் என நாள்தோறும் நடைபெறும் போராட்டங்களே சாட்சி.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிப்பதோடு, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் தினகரன் விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Related Post

500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

Posted by - January 2, 2025 0
அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம். தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல்…

பொறுப்புக்கு வரும் பொன்முடி; வாயை கட்டுவதாக வாக்குறுதி…

Posted by - June 25, 2025 0
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டு, கட்சியிலும், அரசிலும் பதவிகளை இழந்த பொன்முடி, மு.க. ஸ்டாலினை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் அவர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

Posted by - April 11, 2023 0
சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…

இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

Posted by - March 2, 2023 0
செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *