ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

157 0

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நேற்று ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாயமான வகையில் 466 ஆக பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இன்று காற்றின் தரக்கு குறியீடு 441 ஆக பதிவாகி அச்சுறுத்தி வருகிறது. இது ஒரு நாளுக்கு ஒருவர் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான அளவில் காற்றில் மாசு எள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் மிக குறைந்த அளவிலே தென்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர், வயதானவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனைகள் சுவாசக் கோளாறு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக டெல்லி முழுவதும் தெரிவுநிலை குறைந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல் “நிலை 3” எனும் செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது.BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. மின்சாரம், சிஎன்ஜி அல்லாத வெளிமாநில பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.காற்று மாசை கட்டுப்படுத்த “நிலை 3” செயல் திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Post

TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் – யார் எழுதியது.?

Posted by - July 29, 2025 0
டிசிஎஸ் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை படிப்படியாக வேலையை விட்டு நிறுத்தப்போவதாக அறிவித்த நிலையில், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு கடிதம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?

Posted by - April 7, 2025 0
இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால்…

செல்போனில் பேசியபோது “வெடிகுண்டு” என சொன்னதால் பயணி கைது: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

Posted by - June 9, 2023 0
புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது…

காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – ”வெட்கமாக இல்லையா”

Posted by - March 13, 2026 0
தி ஹண்ட்ரட் எனப்படும் கிரிக்கெட் லீகில் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததற்காக, சன்ரைசர்ஸ் நிர்வாகத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். SRH The Hundred Auction: சர்வதேச அரங்கில்…

10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

Posted by - June 19, 2025 0
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *