trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

137 0

Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி செவிலியர் உயிரிழப்பு

திருச்சியில் கடந்த வாரம் செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – கலைச்செல்வி தம்பதியினர்  மகள் சீதாலட்சுமி (19). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, செவிலியர் சீதாலட்சுமி திடீரென உயரிழந்தார். மூக்கு அறுவை சிகிச்சைக்கு சென்றவர் திடீரென உயிரிழந்தது சீதாலட்சுமியின் பெற்றோரை மட்டுமில்லாமல் உடன் பணியாற்றிய செவிலியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.

மூக்கு அறுவை சிகிச்சை- செவிலியர் உயிரிழப்பு

இதனையடுத்து தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், செவிலியர் கல்லூரி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.

உயிரிழப்பிற்கு காரணம் என்ன.?

குழுவில் இஎன்டி மருத்துவர் பாரதி மோகன் , மயக்கவியல் மருத்துவர் சண்முகசுந்தரம் , மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழந்ததற்கு டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே (Inj dexamethasone) குறிப்பிட்ட பேட்ச் மருந்து சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் நிறுத்தப்பட்டு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

crime news

கோவை சிறுமி வழக்கில் ஷாக் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Posted by - May 23, 2026 0
சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் சடலமாக மீட்கபட்ட 10…

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

மனைவி பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர்

Posted by - July 8, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 வரை படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *