யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

154 0

ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு எனவும் மத்திய அமைச்சருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இல்ல எனக்கு புரியல. நாம கட்டிய வரிப்பணத்தை கேட்கிறோம். இதுல அரசியல் செய்ய என்ன இருக்கு? தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம். மாணவர்களுக்காக வரவேண்டிய கல்வித் தொகையை கேட்டிருக்கிறோம். இந்த வருஷம் மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள்.

மும்மொழிக்கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம். தமிழர்களின் உரிமைதான் மொழி உரிமை. கல்வி உரிமை. மொழிக்காக பலர் உயிர் தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. யார் அரசியல் செய்கிறார்கள் என நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக புதிய கல்வி கொள்கையை ஏற்க வைப்பதில் மத்திய கல்வி அமைச்சர் விடாப்பிடியாக இருக்கிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதிலிருந்து தமிழகத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ஒரு காலமும் மும்மொழிக்கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது எனவும் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன.

திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழிக்கொள்கையை ஏற்க முடியாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கே கடிதம் எழுதிவிட்டார். ஆனாலும் அவர்கள் விட்ட பாடில்லை. தமிழக முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் “புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 8ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கற்றலை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது. அறிவியல் கல்வியை அடிப்படையாகக் கொண்ட பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை எதிர்ப்பதால், தமிழ்நாடு அரசு ரூ.2,500 கோடியை அல்ல, 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாக, பொறுப்புள்ள பதவியில் இருப்போர் பரப்பக் கூடாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள், மத்திய அரசின் நிதியை முழுமையாகப் பெறுகின்றன.

மாணவர் நலனுக்கான கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிப்பது பிற்போக்குத்தனமானது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில், ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பது என்பதே கிடையாது. தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியை அரசியல் ஆக்கக்கூடாது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி உயர வேண்டும் என்றும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Post

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

மூன்றுவகையான இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுகின்றன… அமைச்சர் மா.சுப்ரமணியன்

Posted by - March 14, 2023 0
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் H1N1 இன்புளுயன்சா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பற்றிய அச்சம்…

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே

Posted by - July 11, 2025 0
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வீடுகளுக்கே தேடிச்சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடையில்…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *