இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா!

271 0

இந்தியன் 2

2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் நஷ்டமடைந்துவிட்டது தோல்வியை சந்தித்துள்ளது என கூறி சில தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், அது உண்மையில்லை படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

நஷ்டம்? இல்லை லாபமா

“இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய இரு திரைப்படங்களின் மொத்த பட்ஜெட் ரூ. 500 கோடி. இதில் ஒரு பாகத்திற்கு ரூ. 250 கோடி செலவு என வைத்துக்கொள்ளலாம். இதில் 90% சதவீதம் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் எடுத்துவிட்டது.

இப்படத்தின் OTT உரிமை ரூ. 125 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ. 68 கோடி. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை போட்ட காசை எடுத்துவிட்டார்கள். இதன்பின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்தியன் 2 படத்தின் மூலம் வரவேண்டிய தொகை ரூ. 50 கோடி மட்டுமே தான். இதில் கர்நாடகா உரிமை ரூ. 15 கோடிக்கு விற்பனை ஆகிவிட்டது.இதன்பின் பார்த்தல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 35 கோடி தான் வரவேண்டியது. இதில் தமிழநாடு உரிமை, கேரளா உரிமை, ஆந்திரா உரிமை, இந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டி உரிமை மற்றும் ஆடியோ உரிமை என பல இருக்கிறது. இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் லைகா நிறுவனத்திற்கு இந்தியன் 2 மிகவும் லாபகரமான படம் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை” என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Related Post

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

COPY RIGHT சர்ச்சை! 20 கோடி கேட்டாரா தனுஷ்.. விளக்கம் அளித்த இயக்குநர் வெற்றிமாறன்

Posted by - June 30, 2025 0
வெற்றிமாறன் –  எஸ்டிஆர் 49 விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் வாடிவாசல் படம் தள்ளிப்போயுள்ளது. இதனால் கலைப்புலி எஸ்.…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

Posted by - March 29, 2023 0
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - January 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *