சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்… புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு…

291 0

Tamil Nadu Budget 2024:

மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்: தமிழக அரசு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பின் கீழ் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை பேரவையில் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் இந்த நிதிநிலை அறிக்கையில், பல புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பின் கீழ் ஏழு தலைப்புகளில் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மையாக சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், சமூக நல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சமத்துவ நோக்கில் மகளிர் நலம் என்ற தலைப்பின் கீழ் மகளிர் நலன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. பசுமைவழிப் பயணம் என்ற அம்சத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டின் ஏழாவது அம்சமாக தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலுக்கு ஏற்ப, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு, எத்திசையிலும் புகழ் பதித்து திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

இரவில் மல்லிகை வாசனை, கொலுசு சத்தம்.. சிசிடிவியில் பதிவான ஆவி?… பீதியில் மக்கள்..!

Posted by - March 2, 2023 0
செருப்பு அணிந்து நடக்கும் சத்தமும், யாரோ அழுவது போன்ற சத்தமும் நள்ளிரவில் கேட்பதாக தகவல் பரவியது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. திருவள்ளூர் ரயில்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பிரசவ வலியுடன் 15 கி.மீ. ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற கர்ப்பிணி

Posted by - July 1, 2023 0
அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி…

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

தமிழ்நாட்டில் 5 நாட்கள் தொடர் கனமழை : வானிலை மையம் அலெர்ட்

Posted by - November 29, 2023 0
டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் – வானிலை மையம்… தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *