தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

251 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரவும், எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் களத்தில் குதித்துள்ளன. இந்த சமயத்தில் தமிழக அரசியல் களத்தில் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏற களத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள பரப்புரை:

திமுக மிகப்பெரிய கூட்டணியை தங்கள் வசம் வைத்துள்ள நிலையில், அதிமுக – பா.ஜ.க.வுடன் கூட்டணியை வைத்துள்ளது. நடிகர் விஜய் கூட்டணிக்கு சில முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இணைய வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய தமிழ்நாட்டில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது. தொலைக்காட்சி, நாளிதழ்களை காட்டிலும் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய ஊடகமாக மாறியுள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சமூக வலைதள வளர்ச்சி அபரிமிதமானது.

அரசியல் கட்சிகள் திட்டம்:

கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதை அரசியல் கட்சிகள் பயன்படுத்தினர். ஆனால், இந்த முறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த போட்டி ஏற்பட்டிருப்பதாலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் சமூக வலைதள பரப்புரைகளுக்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களுக்காக அதிகாரப்பூர்வமாக உள்ள அரசியல் ஐடி அணிகள் மட்டுமின்றி அதிகளவில் சமூக வலைதள பக்கங்களையும், அதை கண்காணிப்பதற்கு ஆட்களையும் நியமித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு சமூக வலைதள பரப்புரை என்பது அவரது ரசிகர்களால் எந்தவித தடையும் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே அவர்களை விஜய் விர்சுவல் வாரியர் என்று அழைத்தார்.

சமூக வலைதள போர்:

அதேபோல, நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவாக கடந்த பல ஆண்டுகளாகவே இணையதளங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களும் அடுத்த 10 மாதங்களுக்கு தீவிரமாக செயல்பட உள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்குகள் பல தொகுதிகளில் முடிவுகளையும் மாற்றும் வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது.

இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவு பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகளவு பரப்புரைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் தங்களது ஐடி அணிகளுக்கு உத்தரவிட்டுள்ளன. அரசியல் களத்தில் நேரடியாக நடக்கும் வார்த்தை மோதல், வார்த்தை போர்களை காட்டிலும் அடுத்த 10 மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் நடக்கும் வார்த்தை போர் மற்றும் கருத்து மோதல் உச்சகட்டமாகவும், உக்கிரமாகவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்து வைப்பது போல எதிர்க்கட்சிகளை நாகரிகமாகவும், அதேசமயம் ஒவ்வாெரு கட்சியின் ஆதரவாளர்களில் சிலர் எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளாலும் விமர்சிப்பார்கள் என்பதால் சமூக வலைதளம் ரணகளமாக மாறப்போகிறது என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை.

Related Post

விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

Posted by - December 15, 2024 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…

ஈபிஎஸ் vs அண்ணாமலை : உழைக்காமல் தலைவரான ஒரே நபர்.. எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுத்து முதலமைச்சரானவர் .. வலுக்கும் வார்த்தைபோர்

Posted by - August 26, 2024 0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தைப் போர் மீண்டும் வலுத்துள்ளது. கூட்டணியில் இருந்தபோது அதிமுக நல்ல கட்சியாகத் தெரிந்த…

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

Posted by - December 4, 2024 0
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *